திருப்பதியில் கள்ள ஓட்டு போட வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்!

 
Election

திருப்பதியில் கள்ள ஓட்டு போட வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் ஐந்து பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Bapatla: Andhra Pradesh Chief Minister and YSR Congress Party chief Y.S. Jagan Mohan Reddy during a rally for Lok Sabha elections, at Repalle in Bapatla district, Monday, May 6, 2024. (PTI Photo)(PTI05_06_2024_000210B) (PTI)

திருப்பதியில் கள்ள ஓட்டு போட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளியூர்களில் இருந்து ஏராளமானோரை திருப்பதிக்கு அழைத்து வந்துள்ளனர். கர்னூல், சென்னை, ரேணிகுண்டா பகுதிகளில் இருந்து இளைஞர்களை கள்ள ஓட்டு  பதிவு செய்ய அழைத்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதையடுத்து திருப்பதி ஜகன்மாதா சர்ச்  பள்ளியில் தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள் 5 பேரை  பிடித்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ வேட்பாளர் ஆரணி சீனிவாசலு சம்பவ இடத்திற்கு வந்து போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். மக்கள் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும், கள்ள ஓட்டு போட வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும், மக்கள் தங்கள் வாக்குரிமையை அச்சமின்றி செலுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் சீனிவாசலு கேட்டு கொண்டார்.