தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சிக்கான கோரிக்கையில் என்னுடன் இணையுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஷர்மிளா கடிதம்

 

தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கான கோரிக்கையில்  தன்னுடன் இணையுமாறு பா.ஜ.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலங்கானா கட்சியின் (ஒய்.எஸ்.ஆர்.டி.பி.) தலைவி ஒய்.எஸ். ஷர்மிளா கடிதம் எழுதியுள்ளார். 

தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கான கோரிக்கையில்  தன்னுடன் இணையுமாறு ரேவந்த் ரெட்டி (காங்கிரஸ்), பாண்டி சஞ்சய் (பா.ஜ.க.) மற்றும் அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலங்கானா கட்சியின் (ஒய்.எஸ்.ஆர்.டி.பி.) தலைவி ஒய்.எஸ். ஷர்மிளா கடிதம் எழுதியுள்ளார். ஒய்.எஸ். ஷர்மிளா அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து மாநிலத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை தெரிவிக்க நீங்கள் என்னுடன் சேர வேண்டும். கே.சந்திரசேகர் ராவுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதில் சுதந்திர கொடுக்கப்பட்டுள்ள பி.ஆர்.எஸ். கட்சி குண்டர்களால் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் குறிவைக்கப்படுகிறார்கள். கே.சந்திரசேகர் ராவின் ஊழல் மற்றும் அவரது சகாக்களின தவறான செயல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட இடங்களிலெல்லாம் தாக்குதல்கள் மற்றும் போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தியது. 

காங்கிரஸ்

தியாகங்களின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட தெலங்கானாவில்,  ஜனநாயகம்,  பேச்சுரிமை, அரசியலமைப்புச் சலுகைகள் நசுக்கப்பட்டன. எதிர்கால சந்ததியினருக்காக நாம் எழுந்து, கைகோர்த்து இந்த போரை நடத்த வேண்டும். இது ஒரு வரலாற்று தேவை, எனவே குடியரசு தலைவரை சந்திப்பதில் என்னுடன் சேர இந்த அழைப்பை நான் விடுக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அண்மையில், தெலங்கானா கவர்னர் தமிழிசையிடம் தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யுங்க என்று ஒய்.எஸ். ஷர்மிளா கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.