போலி வீடியோவால் கம்பி எண்ணிய யூடியூபர் பாஜகவில் இணைந்தார்!!

 
tn

பீகாரைச் சேர்ந்த ஒரு முக்கிய யூடியூப் ஆளுமை மணீஷ் காஷ்யப் இன்று காலை 11 மணியளவில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி மற்றும் அனில் பலுனி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான மணீஷ் காஷ்யப், பாஜக தலைவர் மனோஜ் திவாரியுடன் டெல்லி வந்தார். முன்னதாக, லோக்சபா தேர்தலில் மேற்கு சம்பாரண் தொகுதியில் போட்டியிடப்போவதாக காஷ்யப் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

tn
 

முன்னதாக  தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் வைரலான நிலையில், மணீஷ் காஷ்யப் , சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி,  அதில் சிலரை நடிக்க வைத்து வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளை படம் பிடித்தது தெரியவந்தது.  இதை தொடர்ந்து அவரை கைது செய்த தமிழக போலீசார் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைத்தனர்.

tn

இருப்பினும் காவல்துறை உரிய விதிகளை பின்பற்றி கைது செய்யவில்லை என்று கூறி மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்டவழக்கை மதுரை உயர்நீதி உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.  அதேசமயம் மதுரை சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.