விசாகப்பட்டினத்தில் படகு தீ விபத்து- பிரபல யூடியூபர் கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படகு தீ விபத்தில் யூடியூபர் லோக்கல் பாய் நானியை போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த நானி என்பவருக்கு இரண்டு மீன் பிடி படகுகள் உள்ளன. இந்நிலையில் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ போடுவது, மட்டுமின்றி யூடியூப்பில் சேனலையும் தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் கடலில் மீன்பிடித்தல் உள்ளிட்ட பல ரீல்ஸ்களை தயாரித்து பிரபலமானார்.
இந்நிலையில் நானி மனைவிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சீமந்தம் நடந்தது. பின்னர் நண்பர்களுடன் மது விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அப்போது படகு விற்பனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் ஒரு படகில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து படகிற்கு தீ பிடித்துள்ளது. அந்த நேரத்தில் அங்கேயே இருந்த நானி தீ விபத்து நடந்த இடத்தில் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்து தனது யுடியூப்பில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படகு தீ விபத்து நானியால் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் விசாகப்பட்டினம் முதலாவது நகர போலீசார் நானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.