சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி

 
tn

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

shawarma

மகாராஷ்டிரா ஹனுமான் சாலியில் சாலையோர கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிரதமேஷ் போக்சே(19) என்ற இளைஞர் பலியாகியுள்ளார். தனது மாமாவுடன் இளைஞர் சாலையோர உணவகத்தில் மே 3ஆம் தேதி சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மே7ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

death

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கெட்டுப்போன சிக்கனை ஷவர்மாவில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.இளைஞர் மரணத்தை தொடர்ந்து  கடை உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.