காதலுக்கு வில்லியான காதலியின் தாயை கொலை செய்ய முயற்சி- இளைஞர் கைது

 
murder

தெலுங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கழுத்தை நெறித்த கொலை செய்ய  முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.

லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்துவந்த  இருவர் கைது

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சுட்டலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ராஜ்குமார் அதே கிராமத்தை சேர்ந்த சுஷ்மிதாவுடன் சில காலமாக காதலில் இருந்து வந்தார். ஆனால் அந்தக் காதல் சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்கு பிடிக்கவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவனின் நிலை பற்றி மகளுக்கு எடுத்துக் கூறிய சாமந்தி காதலை கைவிட செய்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தன்னுடைய காதலுக்கு வில்லியாக புறப்பட்ட காதலி சுஷ்மிதாவின் தாய் சாமந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் பட்ட பகலில் சாமந்தியுடன் சண்டை போட்டு அவரை கீழே தள்ளி கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார் ராஜ்குமார். இதனை கவனித்த கிராம பொதுமக்கள் சாமந்தியை மீட்டு போலீசில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.