வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருகிறது - மல்லிகார்ஜுன கார்கே

 
tn

வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருகிறது என்று  பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

modi

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள்; வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வர்.1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான்;

Mallikarjuna Kharge

முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைந்தற்கு நீங்கள் கவலையடைந்துள்ளதை பார்க்கிறேன்; உங்கள் கொள்கைகள், பரப்புரை உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழை மக்கள் சுட்டெரிக்கப்படுகின்றனர். வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.