தனியார் பள்ளியில் முன்னாள் மாணவன் துப்பாக்கி சூடு! கேரளாவில் பரபரப்பு

 
Shooting in Kerala school: Ex student threatens teachers with gun and fires into the air

தனியார் பள்ளியில் முன்னாள் மாணவன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Ex-student uses air pistol in school in Kerala's Thrissur; arrested

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது விவேகோதயம் அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது இன்று பிற்பகல் முன்னாள் மாணவன் கை துப்பாக்கியுடன் பள்ளி முதல்வர் அறைக்குள் நுழைந்தான் அங்குள்ள நாற்காலியில் அமர்ந்த வாரே தன் வைத்திருந்த கைய் துப்பாக்கியில் ஒருமுறை சுட்டுள்ளான் அங்கிருந்து வெளியேறிய பின்பு பள்ளி வகுப்பறைக்குள் சென்று கைதுப்பாக்கியை இரண்டு முறை சுட்டுள்ளான் இதனால் மாணவர்கள் அலறி அடித்து ஓடி உள்ளனர்

அதன் பின் துப்பாக்கியால் சுட்ட மாணவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான் அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார் விசாரணையில் துப்பாக்கியால் சுட்ட மாணவனின் பெயர் ஜெகன் என்பதும் இவன் இந்த பள்ளியில் முன்னாள் பிளஸ் டூ படித்தவர் என்றும் தற்போது துப்பாக்கி சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஏர்கன் வகையைச் சேர்ந்தது என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து இந்த ஏர்கன் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினான் என்பதும் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.