மோடி நாட்டை உலகளவில் பிரபலமாக்கும் அதேவேளையில், சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி.. யோகி ஆதித்யநாத்

 
யோகி ஆதித்யநாத்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டை உலகளவில் பிரபலமாக்கும் அதேவேளையில், சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கினார்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: இன்று இந்திய ஜனநாயகத்தை விமர்சிப்பவர்கள், வாய்ப்பு கிடைத்தபோது ஜனநாயகத்தையே கழுத்தை நெறிக்க எந்த வாய்ப்பையும் விட்டுக்கொடுக்காமல் விட்டவர்கள்தான். பிரதமர் நரேந்திர மோடி நாட்டை உலகளவில் பிரபலமாக்கும் அதேவேளையில், சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது நாட்மை விமர்சனம் செய்கின்றனர். நாட்டில் இருக்கும்போது உத்தர பிரதேசத்தை கேரளாவிலும், டெல்லியில் இருக்கும்போது கேரளாவையும் விமர்சனம் செய்கின்றனர். 

மோடி

பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 8 முதல் 9 ஆண்டுகளில் நாட்டின் சாதனைகள் புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் வரும் காலங்களில் இந்தியா உலகுக்கு வழி காட்டும் நாடாக திகழும். குடியரசு தலைவரின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஜி-20 அமைப்பின் தலைவர் பதவியை பெறுவது இந்தியாவின் திறனை காட்டுகிறது. ஆப்கானிஸ்தானாக இருந்தாலும் சரி, ரஷ்யா-உக்ரைன் போராக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியின் முயற்சி எல்லா இடங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தனர். அதே நேரத்தில் ஜப்பானிய பிரதமர் விரைவில் இந்தியா வர உள்ளார். இவை அனைத்தும் நாட்டின் பதிய காட்சியை முன்வைக்கின்றன. 

ராஜீவ் காந்தி

இன்று அனைவரும் எளிதாக சமையல் கியாஸ் இணைப்பை பெறுகின்றனர். தகுதியான குடும்பங்களுக்கு அரசாங்கம் இலவச சமையல் கியாஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது. உத்தர பிரதேசத்தில் 1.74 கோடி பேரும், நாட்டில் 3.5 கோடி மக்களும் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சமையல் கியாஸ் இணைப்புகளை பெற்றுள்ளனர். இடைத்தரகர்கள் தலையீட்டால் அரசு அனுப்பிய ஒரு ரூபாயில்  15 பைசா மட்டுமே ஏழைகளுக்கு சென்றடைந்தது என்று ராஜீவ் காந்தி தெரிவித்தார். விதவைகள் மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியத்தில் கூட இடைத்தரகர்கள் கமிஷன் வாங்கினர். ஆனால் இன்று நேரடி பண பரிமாற்றம் மூலம் முழுத்தொகையும் பயனாளிகளின் கணக்குகளுக்கு செல்லும் வகையில் பிரதமர் மோடி இது போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளார். எங்கும் திருட்டு இல்லை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.