நாட்டின் மாற்றத்திற்கு பிரதமர் மோடிதான் காரணம்- யோகி ஆதித்யநாத்

 
yogi

ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

जनसभा को संबोधित करते उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्य नाथ। - Dainik Bhaskar

அதன்படி இமாச்சல பிரதேசம் மண்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “பிரதமர் மோடியின் தலைமையை நீங்கள் நம்பியதால் தான் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுளது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பிரதமர் மோடியின் தலைமைதான் காரணம். ஒருகாலத்தில் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த இந்தியா, இன்று உலகை வழிநடத்திவருகிறது. நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒழித்துவிட்டார். கொரோனா காலத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி, சிகிச்சை மற்றும் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது பாஜக அரசு. காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் இலவசங்கள் கிடைக்க வாய்ப்பே இருந்திருக்காது. நாட்டில் தீவிரவாதத்தின் வேரை காங்கிரஸ் உருவாக்கியது.

இன்று இமாச்சலப் பிரதேச இளைஞர்கள் வேண்டுமானால் காஷ்மீரில் வீடும் நிலமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த உரிமையை காங்கிரஸ் தனது சுயநலத்திற்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பறித்து விட்டது.   காங்கிரசுக்கு மாஃபியாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஒரே குடும்பத்திற்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் வாழ்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி 135 கோடி மக்களை குடும்பமாக கருதுகிறார். காங்கிரஸை ஆதரிப்பது என்பது நாட்டின் பாதுகாப்போடு விளையாடுவது, வளர்ச்சிக்கு இடையூறாக மாறுவது, மாஃபியாவை ஊக்குவிப்பது என்று பொருள். மாஃபியா ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பணியை பாஜக ஆட்சி செய்துள்ளது” என தெரிவித்தார்.