தீபாவளியன்று வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை சுட்டுக் கொலை
பஞ்சாபில் வீட்டின் வெளியே தீபாவளி பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்த மல்யுத்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபின் கபூர்தலாவில் தீபாவளி அன்று தனது வீட்டின் வெளியே பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த 27 வயது மல்யுத்த வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கபூர்தலாவில் உள்ள மெஹ்தாப்கர் மொஹல்லாவைச் சேர்ந்த, மணி என்ற பஹல்வான், அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக
அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட தன் மகனுக்கு யாருடனும் தகராறு இல்லை என்று மணியின் தந்தை பக்கா கூறினார். இரவு 7:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தங்களுக்கு அழைப்பு வந்ததையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மணிக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர்.

