மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்!

 
tn

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Parliament

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் பிரதி வெளியிடப்பட்டுள்ளது.

128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டாலும் 2024 மக்களவைத் தேர்தலில் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. தொகுதி மறுவரையின்படி, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை  மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அதிகரிக்கப்படலாம்.


மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, அனைத்து உறுப்பினர்களும் பெண் அதிகாரத்திற்கான வாயில்களைத் திறப்பதற்கான ஆரம்பம், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், முதல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது; பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காகவே இந்த தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.  மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மசோதா அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார்.


-