திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

 

திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத் முழுவதும் வெள்ளக்காடாக இருக்கும் நிலையில், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

ஹைதராபாத் மட்டும் அல்லாது பண்ட்லகுண்டா, ரங்காரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் இரண்டு அடுக்கு மாடி சரிந்து விழுந்ததில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய, சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடு இடிந்து விழுந்ததும் அப்பகுதி முழுவதும் புதுக்காடாக காட்சி அளித்ததால் ஊழியர்கள் அதனை சுத்தம் செய்தனர்.

திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், இடிந்து விழுந்த கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்ததாகவும் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.