பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
நமது நாட்டின் பிரதமராக பாஜக கட்சியை சேர்ந்த நரேந்திர மோடி உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்து வருகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டின் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை காவல்துறையை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கொலை செய்வதற்கான திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அந்த செல்போன் எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டறிந்த மும்பை போலீசார் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.