‘பன்னீர் டிக்கா சாண்ட்விச்-க்கு பதில் சிக்கன் டிக்கா சாண்ட்விச்’ ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண்

 
‘பன்னீர் டிக்கா சாண்ட்விச்-க்கு பதில் சிக்கன் டிக்கா சாண்ட்விச்’ ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண்

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் நிராலி. இவர் சைவ உணவு மட்டுமே உண்பவர். இந்நிலையில் நிராலி, அகமதாபாத்தின் சயின்ஸ் சிட்டியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து உணவு டெலிவரி செயலி மூலம் அகமதாபாத்தில் உள்ள 'பிக் அப் மீல்ஸ் பை டெர்ரா' என்ற உணவகத்தில் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.

பனீர் சாண்ட்விச் ஆர்டர் செய்த பெண், அதற்கு பதிலாக சிக்கன் வாங்கி, 50 லட்சத்துக்கு வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் பனீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக, உணவகம் அவருக்கு சிக்கன் டிக்கா சாண்ட்விச்ச்சை வழங்கியது. அதை வாங்கி சிறிது சாப்பிட்ட பின்னர் அது சிக்கன் டிக்கா சாண்ட்விச் என்பதை நிராலி உணர்ந்துள்ளார். அந்த பெண் இதுவரை அசைவ உணவு சாப்பிடாததால், தற்போது அந்த உணவகத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பெண், அகமதாபாத் மாநகராட்சியின் துணை சுகாதார அதிகாரிக்கு கடிதம் எழுதி, உணவகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையில், உணவுத் துறை உணவகத்திற்கு எதிராக  ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது, ஆனால் அதனை ஏற்க மறுத்த நிராலி, “ரூ. 5,000 அபராதம் போதாது, நான் நியாயம் கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்வேன். ரூ. 50 லட்சம் இழப்பீடு கேட்டிருக்கின்றேன்” எனக் கூறினார் .