சாய்னாவுக்கு ஆபாச ட்வீட்! நடிகர் சித்தார்த் மீது பாயும் வழக்கு

 
siddharth

நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மகாராஷ்டிரா காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

சாய்னா

நடிகர் சித்தார்த், அவ்வப்போது அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்குவது உண்டு. ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவார். அந்த வகையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் டுவிட் ஒன்றுக்கும் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்திருந்தது பல்வேறு தரப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய சாய்னா நெய்வால் அண்மையில் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், ”எந்த நாடும் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சித்தார்த், “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... ஆண்டவருக்கு நன்றி... எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.. வெட்கப்படுகிறோம்” எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பதிலளித்த சித்தார்த்துக்கு கண்டனங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டு, மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில் நடிகர் சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ட்விட்டர் தலைமை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள கணக்கில் தடை செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.