கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

 
murder murder

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் பெஹ்ரா (32), பந்திதா பெஹ்ரா (27) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆறு வயது மகள் உள்ளார். இவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வேலை நிமித்தமாக குடிபெயர்ந்து நாச்சாரம் பகுதியில் உள்ள ஓல்ட் மீர் பேட் ஷாந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.  நாராயண் பெஹ்ரா பிளம்பராக வேலை செய்து வந்த நிலையில், பந்திதா ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான நாராயண் பெஹ்ரா எந்நேரமும் மது அருந்தி வீட்டுக்கு வந்து மனைவியிடம் சண்டையிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். 

இந்தநிலையில் வெல்டராக வேலை செய்து அதே காம்பவுண்டில் அருகில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் (25), பந்திதாவுக்கும் திருமணத்திற்கு புறம்பான நெருக்கமான உறவு ஏற்பட்டது. இந்த உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததாகக் கருதிய பந்திதா, காதலன் வித்யாசாகருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இத்திட்டப்படி வியாழக்கிழமை இரவு நாராயணும் வித்யாசாகரும் சேர்ந்து மல்லாபூர் பகுதியில் உள்ள ஒரு மது கடையில் மது அருந்தினர். பின்னர் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த நாராயணுடன் பந்திதா சண்டையிட்டார். திட்டப்படி அதே சமயத்தில் வீட்டுக்குள் வந்த வித்யாசாகருடன் சேர்ந்து இரும்புக் கம்பியால் நாராயணின் தலையில் பலமாக அடித்தனர். இதில் நாராயண் பெஹ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் எதுவும் தெரியாதது போல் நடித்த பந்திதா, அடையாளம் தெரியாத நபர்கள் வந்து தன் கணவரைத் தாக்கியதாகக் கூறி அனைவரையும் நம்ப வைக்க முயன்றார். ஆனால் நாராயண் பெஹ்ராவின் உறவினர்கள் பந்திதா மீது சந்தேகம் தெரிவித்து போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மனைவி பந்திதாவை காவலில் எடுத்து விசாரித்த போது, காதலனுடன் சேர்ந்து தானே கணவரைக் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.