இரண்டாவது திருமணம் செய்த கணவரை மின்கம்பத்தில் கட்டி, செருப்புமாலை அணிவித்து அடித்த மனைவி

 
husband

கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து அறிந்த மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து அடித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம்,  மாந்தனி மண்டலம், ஸ்வர்ணபள்ளி  கிராமத்தைச் சேர்ந்த அகிலா என்பவருடன் ஸ்ரீகாந்த் ரெட்டி  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.    திருமணத்தின் போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்த் ரெட்டிக்கு வரதட்சணையாக 20 லட்சம் கொடுத்தனர். இருவருக்கும் மகன் பிறந்த நிலையில்  ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர் ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

அகிலாவுக்கு இந்த விவகாரம் தெரியவந்தது இதனால் அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த் ரெட்டியை ஹன்மகொண்டாவில் இருந்து ஸ்வர்ணபள்ளிக்கு அழைத்து வந்தனர்.  பின்னர், ஸ்ரீகாந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து  செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசாரிடம் தனக்கு உரிய நியாயம் கிடைக்க  வேண்டும் என அகில போலீசாரை கேட்டுக் கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.