எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - பாஜக ஆலோசனை

 
tt

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 292 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

modi

முன்னதாக இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.  இருப்பினும்  தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. 

modi rally

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணம் குறித்து மாநில வாரியாக பாஜக தலைமை ஆய்வு செய்கிறது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.