இது விஸ்கி ஐஸ்கிரீம்! தெலங்கானாவை அதிரவைத்த கும்பல்
ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்து ஸ்பெஷல் ஃபேவர் என அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர்களை கலால் துறை போலீசார் கைது செய்தனர்.
ஐஸ்கிரீம் என்றால் சிறுயவர்கள், பெரியவர்கள் என்று பாராமல் அனைவரும் வேண்டாம் என்று கூறாமல் விரும்பி சாப்பிடும் ஒன்று. ஜலதோஷம் வரும் என்று எச்சரித்தாலும், டாக்டர்கள் சொன்னாலும் அதனை பொருட்படுத்தாமல் ரகசியமாக வாங்கி ரூசி பார்ப்பவர்கள் பலர் உள்ளனர். இதனை சிலர் தங்கள் பணமாக்க நினைத்து யாருக்கும் சந்தேகம் வராமல் ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்து விற்பனை செய்து வருகின்றனர். ஸ்பெஷல் ஃபேவர் என கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், சில காலமாக விற்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஐஸ்கிரீம் சுவையாக இருப்பதால், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தினமும் நான்கு முறை இந்த பார்லருக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஐஸ்கிரீம் பார்லரில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 60 கிராம் ஐஸ்கிரீமில் சுமார் 100 மில்லி விஸ்கி கலந்து விற்பனை செய்யப்படுவதை கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த ஐஸ்கிரீம் பார்லரை சில காலமாக வெளியில் யாருக்கும் சந்தேகம் வராமல் வருபவர்கள் அங்கேயே ருசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் இதனால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. ஐஸ்கிரீமில் விஸ்கியின் கலந்திருப்பது போலீசார் கண்டுபிடுத்ததால் ஒன் அண்ட் ஃபைன் ஐஸ்கிரீம் உரிமையாளர்களான தயாகர் ரெட்டி, ஷோபன் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து மொத்தமாக ஐஸ்கிரீம் ஆர்டர்களைப் யாராவது பெறுகிறார்கள்? எவ்வளவு காலமாக இந்தத் தொழிலை நடத்தி வருகிறீர்கள்? அவர்களின் வழக்கமான வாடிக்கையாளர்கள் யார்? நகரத்தில் ஒன் அண்ட் ஃபைன் ஐஸ்கிரீம் கிளைகள் எங்கே உள்ளன? கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாக சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை தொடர்ந்தது. இந்த சாக்லேட்டுகள் கடைகளில் தாராளமாக பள்ளி, கல்லூரிகள் அருகே கிடைத்து வந்தது. சமீபத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவை போதையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கலால் துறை அதிகாரிகள் தொடர்ந்து பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.