வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு

 
election commision

கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது, உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

election

வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது, உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 18 .9.24, 25.9.24 மற்றும் 1.10.24 ஆகிய மூன்று தேதிகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 4.10.2024 அன்று நடைபெறுகிறது.இதேபோல் ஹரியானா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்திற்கு வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 12ஆம் தேதி, வேட்பு மனு மீதான பரிசீலனை செப்டம்பர் 13 ஆம் தேதியும் வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தினம் செப்டம்பர் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி வாக்கு பதிவு மற்றும் அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.