ஈஷா மையம் மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை என்ன?- கதறும் குடும்பங்கள்

 
ச்

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Image

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பேரழிவு வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் உள்கட்டமைப்பை அடியோடு சீர்குலைத்து வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. திபெத்தில் தொடங்கி நேபாளத்தின் போட்டே கோசி ஆற்றில் சீறிப் பாய்ந்த வெள்ளம் அந்நாட்டையே உருக்குலைத்துள்ளது.

Image

இந்நிலையில் நேபாளத்தில் கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் அதிகாரப்பூர்வப் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கிய கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது.  ஈஷா மையம் மூலம் யாத்திரை சென்ற 80 பேரை நிலை என்னவென்று தெரியாத நிலையாகவும் இருக்கிறது என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் எங்கள் குழுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஜக்கித் வாசுதேவ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.