நடந்தது என்ன? இளம்பெண் மேலாடையை கழற்றச்சொன்னது ஏன்? சி.ஐ.எஸ்.எப் விளக்கம்

 
a

அத்தனை பேருக்கு மத்தியில் மேலாடையை கழற்றச் சொல்லி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று சி.ஐ.எஸ்.எப் படையினர் மீது 21 வயது இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.  இதற்கு சி.ஐ.எஸ்.எப் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். 

b

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சி. ஐ. எஸ். எப் என்கிற மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அத்தனை பேருக்கு முன்பாக தனது மேலாடையை கழற்ற வைத்து சோதனை செய்து தனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்று டுவிட்டர் பக்கத்தில் குமுறி இருக்கிறார்.

 இதற்கு பாதுகாப்பு படையினரின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் இளம் பெண்ணின் இந்த குற்றச்சாட்டை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.  பெங்களூருவில் இருந்து அந்தப் பெண் ஹைதராபாத்துக்கு சென்றார்.  அவர் அணிந்திருந்த ஜாக்கெட் பேட்ஜ்கள் , மணிகள் கொண்ட டெனிம் ஜாக்கெட்.  அதனால் அதை கழற்றி ஸ்கேன் இயந்திரத்தில் வைத்துவிட்டு பெண் வீரர்தான் பரிசோதித்திருக்கிறார். 

 பரிசோதிக்கும் வரையிலும் திரை மறைவில் இருக்கும் படியும் அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆனால் அந்த இளம் பெண் அதை கொஞ்சமும் கேட்காமல் எல்லோருக்கும் மத்தியில் வெளியே வந்து நின்று இருக்கிறார்.  தானாக வெளியே வந்து நின்றதோடு மட்டுமல்லாமல் தேவையில்லாமல் இப்படி பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளனர்.