#EXITPOLL தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு?
ரிபப்ளிக் பி மார்க் கருத்துக்கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக 150-175 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 142 தொகுதிகளுக்கு 2ம் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 23 அன்று மேற்கு வங்கத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 92.72% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்பது போலத்தான் தரவுகளை வெளியிட்டுள்ளன. 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் கருத்துக்கணிப்புகள் 130 முதல் 150 இடங்கள் வரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு 130 முதல் 160 இடங்கள் வரையும் கொடுக்கின்றன. ரிபப்ளிக் பி மார்க் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 150-175 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

