கொரோனாவிலிருந்து கெஜ்ரிவால் கிரேட் எஸ்கேப்... மீண்டதும் "நச்" அறிவிப்பு - குஷியில் மக்கள்!

 
அரவிந்த் கெஜ்ரிவால்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளார். மேலும் டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 4ஆம் தேதி கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் , உத்தரப்பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் காண்கிறது. இதனையொட்டி, பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த அவருக்கு தொற்று பாதிப்பி ஏற்பட்டது.

ஆல்பா கொரோனா

இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி , அரவிந்த் கெஜ்ரிவால்  வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்.  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”கொரோனாவில் இருந்து குணமடைந்து , மீண்டும் உங்கள் சேவைக்கு வந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதனைத்தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். நீங்கள் (மக்கள்) முககவசம் அணிந்தால், நாங்கள் (அரசு) ஊரடங்கை விதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். மக்கள் வாழ்வாதரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதிப்பு குறித்து நாளை(ஜன் 10) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறினார்.