ம.பி., சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

 
tt

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.

vote

சத்தீஸ்காரில் ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

tn

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறும் நிலையில், 2533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதுதொடர்பாக பிரதமர் மோடி , மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் என்று கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது.