#BREAKING மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு தோல்வி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.

தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்தது. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா (2026) மீது வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது. மசோதா வெற்றி பெற தேவையான 326 வாக்குகளுக்கு பதில் 278 பேரும், எதிராக 211 பேரும் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முடியாததால் மசோதா மீதான வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது. தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பும் மக்களவையில் தோல்வி அடைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 297 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கூட தொகுதி மறு வரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் 278 வாக்குகள் என்பது தான் பதிவாகி இருக்கிறது. எனவே பாஜகவின் கூட்டணியில் உள்ள கிட்டத்தட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தொகுதி மறு வரையறை மசோதா நிராகரிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.


