இவங்களுக்கு எதிராக ஓட்டு போடுங்க - நடிகை பார்வதியின் வைரல் போஸ்ட்

 
tn

மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று நடிகை பார்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

tn

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி. இவர் தமிழில் பூ ,சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கேரளத்தில் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் நடிகை பார்வதி தனது வாக்கினை செலுத்துள்ளார் அத்துடன் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று கோரிக்கை எடுத்துள்ளார்.