மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தோப்புக்கரணம் போட்டு தண்டனை அனுபவித்த தலைமை ஆசிரியர்

ஆந்திராவில் அரசு பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவர்களை அடிக்காமல் தலைமை ஆசிரியர் தன்னைத்தானே தோப்பும்கரணம் போட்டு தண்டித்து கொண்ட வீடியோ வைரலாகிவருகிறது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் போப்பிலி மண்டலம் பென்டா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ரமணா பணி புரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியர் ரமணா எங்களால் உங்களை அடிக்க முடியாது, திட்டவும் முடியாது, எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். எனவே மாணவர்களைத் தண்டிக்காமல் தனக்கு தானே தோப்புகரணம் போட்டு கொண்டு தண்டனை அளித்து கொண்டார். இந்த வீடியோ சமூகவளைதளத்தில் வெளியாகி வைரலானது.
இதனை பார்த்த கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில், “ நமது அரசுப் பள்ளிகளில் ஆசிரியரின் வீடியோ பார்த்தேன். நம் அரசு பள்ளி குழந்தைகளை ஊக்குவித்தால் சாதனைகளை செய்வார்கள். அவர்களை தண்டிக்காமல் புரிந்து கொள்ளும் உங்கள் சுய ஒழுக்கமான அணுகுமுறை நல்ல யோசனை, வாழ்த்துக்கள். அனைவரும் சேர்ந்து கல்வித் தரத்தை உயர்த்துவோம். நம் குழந்தைகளின் கல்வி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உழைத்து, அவர்களின் பொன்னான எதிர்காலத்திற்கு வழி வகுப்போம்” என பதிவு செய்துள்ளார்.