மது கொடுக்காததால் ஒயின் ஷாப்பிற்கு தீவைத்த இளைஞர்

 
Fire

ஆந்திராவில் தான் விரும்புய மது பாட்டில் வழங்கவில்லை என  ஒயின் ஷாப்பிற்கு பெட்ரோல் கேனுடன் வந்து  தீ வைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

A Vizag wine shop was torched after workers refused to sell a man liquor  bottle - Vizag Tales

ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டினம்  மதுரவாடா பகுதியில் உள்ள ஒரு அரசு ஒயின் ஷாப்பிற்கு மது என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு வந்தார். ஆனால்  கணக்குகள் முடித்து  கடையை மூடும் நேரம் என்பதால் ஊழியர்கள் மது கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து மது சென்றான். இந்நிலையில் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் வந்து ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றினார். மேலும் மதுக்கடைக்கு தீ வைத்தான்.

உடனே ஊழியர்கள் கடையை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் தீயில் ஒயின்ஷாப் முற்றிலும் எரிந்து நாசமானது. உள்ளே இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகள் எரிந்து நாசமாகியது. ரு.1.5 லட்சம் மதிப்பிலான பொருள் சேதம் அடைந்தது. இதுகுறித்து கடை ஊழியர்கள் அளித்த புகாரின்படி பொதினமல்லயய பாலயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மதுவை தேடி வருகின்றனர்.