காதலனை கரம் பிடித்தார் மோனலிசா
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கேரளாவில் கோயிலில் வைத்து தனது காதலன் பர்கான் கானை திருமணம் செய்தார்.

இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர். நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தற்போது ஆளே மாறி போய் தேவதையாக காட்சி தருகிறார். இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா, தனது காதலர் ஃபர்மான் கானுடன் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பனூர் காவல் நிலையத்திற்கு சென்று, தனது குடும்பத்தினர் , குறிப்பாக தனது தந்தை ஜெய் சிங் போஸ்லே, தங்கள் காதலை எதிர்ப்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, இருவரின் பாதுகாப்புக்கு அரசு உறுதி ஏற்றுள்ளது. மோனலிசா கேரளாவில் கோயிலில் வைத்து தனது காதலன் பர்கான் கானை திருமணம் செய்தார்.



