Gen Z இளைஞர்களை கவர்ந்த 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' முடக்கம்
"காக்ரோச் ஜனதா பார்ட்டி" நையாண்டி அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
இந்திய சமூக ஊடக வரலாற்றில் கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த Gen Z இளைஞர்களையும், நெட்டிசன்களையும் கவர்ந்து வரும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி இயக்கத்திற்கு மத்திய அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. சுமார் பல கோடி பேர் பின்தொடரும் 'காக்ரோச் ஜன்தா பார்ட்டி' என்ற நையாண்டி இயக்கத்தின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. வேலையற்ற இளைஞர்களை `கரப்பான் பூச்சி' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பக்கம் தொடங்கப்பட்டது. அபிஜித் திகே என்பவரால் இந்த பக்கம் தொடங்கப்பட்டது. சட்டப் பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த நையாண்டிப் பக்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் பார்க்க முடியாதபடி இன்று முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் `Cockroach Is Back' என்ற புதிய பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

