மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை - பெரும் பரபரப்பு!

 
Madhya Pradesh

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 2533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் இரு மாநிலங்களிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது. 

vote

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டிமானி தொகுதியின் மோரீனா, மிர்கான் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியதால் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.