தாயகம் திரும்பிய வினேஷ் போகத்... டெல்லி விமான நிலையத்தில் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பு..

 
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்... டெல்லி விமான நிலையத்தில் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பு.. 

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்ணீர் மல்க வந்திரங்கிய வினேஷை,  சக வீரர்கள் ஆரத் தழுவி வரவேற்றனர். 

நடந்து முடிந்த பாரிஸ் ஒபிம்லிக்கில்  நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில்  பங்கேற்றிருந்தார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நான்கு முறை உலக சாம்பியனும் ,  நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யுய் சுசாகியையும்,  காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஒக்சனா லிவாச்சியையும், அரையிறுயில் கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸ் குஸ்மனையும் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். உலகின் முன்னணி வீராங்கனைகள் 3 பேரை ஒரே நாளில் வீழ்த்தி பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில்,  100 கிராம் கூடுதல் எடையால் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.   

தாயகம் திரும்பிய வினேஷ் போகத்... டெல்லி விமான நிலையத்தில் கண்ணீர் மல்க உற்சாக வரவேற்பு.. 

அத்துடன்  வினேஷுக்கு  மல்யுத்த போட்டி விதிகளின்படி 50 கிலோ எடை பிரிவில் கூடுதல் எடை உள்ளதால் வெளிப்பதக்கம் கூட வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், தமக்கு வெள்ளி பதக்கம் வழங்கக்கோரியும்  வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார்.  இந்த மேல்முறையீட்டை மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் விசாரித்து வந்த நிலையில், 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டு பின்னர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

மீண்டும் அவரது பதக்க கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, விமானம்  மூலம் டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமான நிலையத்தில் உறவினர்களும் சக வீரர்களும் கண்ணீர் மல்க மேல தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட வினேஷ் போகத்துக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   பேச முடியாமல் கண்ணீருடன் இருந்த வினேஷ் போகத்துக்கு சக வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். நூலிழையில்  பதக்க வாய்ப்பை தவறவிட்ட  வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவராக கருதி உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.