பாஜகவில் இருந்து விஜயசாந்தி விலகல்

 
பிரதமர் மோடியை தீவிரவாதி என்ற நடிகை விஜயசாந்தி இன்று மீண்டும் தாய் கட்சியில் இணைகிறார்..

தெலங்கானா பாஜகவிலிருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸில் இணையும் நடிகை விஜயசாந்தி?- Dinamani

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாத அதிருப்தியில் விஜயசாந்தி விலகல் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைவர்கள் தெலுங்கானாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் விஜய் சாந்தி அவர்களுடன் இணக்கமாக பழகாமல் கூட்டங்களிலும் பங்கேற்பதை தவித்து வருகிறார்.  தெலுங்கானாவில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக வெளியிட்ட பட்டியலில் விஜயசாந்தி பெயர் இதுவரை இடம் பெறவில்லை. அவ்வாறு உள்ள நிலையில் விஜய் சாந்தி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். விரைவில் காங்கிரஸில் இணைவார் என தெலுங்கானா அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.