ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் விருந்துக்கு ஏற்பாடு செய்ததில் இருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் காணவில்லை.. பா.ஜ.க.

 
சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் விருந்துக்கு ஏற்பாடு செய்ததில் இருந்து நகரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் காணவில்லை என்று பலர் என்னிடம் புகார் தெரிவித்தனர் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் குமார் சின்ஹா குற்றம் தெரிவித்தார்.

பீகார் மாநிலம் முங்கரில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் தனது கட்சி தொண்டர்களுக்கு இறைச்சி-சாதம் விருந்தை ஏற்பாடு செய்து இருந்தார். கூட்டம்  அதிகமாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இதனால் விருந்தில் தள்ளுமுள்ள ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாலன் சிங் ஏற்பாடு செய்த விருந்தினை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

லாலன் சிங்

விஷயம் மிகவும் தீவிரமானது. நகரில் இருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் காணாமல் போனதாக பலர் என்னிடம் தெரிவித்தனர். இறைச்சி மற்றும் சாதத்துக்கு பதிலாக, ஆயிரக்கணக்கான விலங்குகளின் இறைச்சி தொண்டர்களுக்கு உணவளிக்கப்பட்டது. இது விசாரணைக்குரிய விஷயம். இதனால் என்ன நோய் பரவும், விருந்தில் மது பரிமாறப்பட்டதா அல்லது இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எல்லோரையும் சோதனை செய்ய வேண்டும். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மது அருந்தினார்களா அல்லது இல்லையா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

விஜய் குமார் சின்ஹா

அதேசமயம் விஜய் குமார் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செ்யதி தொடர்பாளர் அபிஷேக் ஷா கூறுகையில், விஜய் குமார் சின்ஹா மனதளவில் திவாலானவர். விஜய் குமார் சின்ஹா தனது சொந்த விருந்தில் மக்களுக்கு எந்த மிருகத்தின் இறைச்சியை பரிமாறுகிறார் என்பதை அவரே வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.