குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா

 
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Image

கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜக்தீப் தங்காரை பாஜக அறிவித்து, 2025 வரை துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். ராஜஸ்தான் மாநிலம் கிதானாவில் 1951-ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜக்தீப் தங்கார், 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றினார். 1990 முதல் 1991 வரை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1993 மற்றும் 1998 க்கு இடையில், அவர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.