துணை ஜனாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
Mar 9, 2025, 10:33 IST1741496619400

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. 73 வயதான அவர் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) அனுமதிக்கப்பட்டார்.
தங்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.