வயநாட்டில் ஆதிவாசி பெண்ணை அடித்து கொன்ற புலி சடலமாக கண்டெடுப்பு!

 
tiger

வயநாட்டில் ஆதிவாசி பெண்ணை அடித்துக் கொன்ற புலி இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த புலி தாக்கியதில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக அந்த புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆட்கொல்லி பு

புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்தது. நேற்று காலை தேடுதல் குழுவினர் புலியை தேடி வந்த போது அந்த புலி திடீரென தேடுதல் குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த புலி சுடப்பட்ட நிலையில், உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று மறைந்தது. இந்த நிலையில், இன்று காலை அங்குள்ள வீட்டின் பின்புறம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலி, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.