இந்த நாட்களில் மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் நாற்காலியை பிடிக்க முயற்சிக்கிறார்கள்... வசுந்தரா ராஜே பேச்சு

 
நான் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முயற்சி செய்தேனா?.. மவுனத்தை கலைத்த பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே…

இந்த நாட்களில் மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் நாற்காலியை பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே பிரதாப்கரில் உள்ள ஹோரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜே பேசுகையில் கூறியதாவது: விசுவாசத்தை பற்றி குறிப்பிடும் போதெல்லாம், ராம பக்தர் அனுமன் பெயர் முதலில் வரும். ஆனால் இப்போதெல்லாம் அனுமன் ஆக்கப்பட்டவர்கள் முதலில் வெளியேறுகிறார்கள். 

பதவி வாய்ப்பு

ராமாயணத்தில் பரதன் ராமரின் பாதணிகளை சிம்மாசனத்தில் வைத்தார். இந்த நாட்களில் மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் நாற்காலியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. ஏனென்றால் வெற்றி எப்போதும் அவர்களுக்கு சொந்தமானது. ராஜஸ்தானில் ஆட்சியில் இருப்பவர்கள் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் ஜாலியாகவும், பணம் சம்பாதித்து கொண்டும் இருக்கிறார்கள். 

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

ஆணும், பெண்ணும் சமம். பெண்கள் குறைவாக மதிப்பிடப்படுகிறார்கள். இது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ரஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க  அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான தனது சொந்த கட்சி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.