19 வயது இளம்பெண்ணை 7 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 23 பேர் - உ.பியில் அதிர்ச்சி

19 வயது இளம் பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 19 வயது இளம் பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பல ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், 6 பேரை கைது செய்த போலீசார், எஞ்சியுள்ளவர்களை தேடி வருகின்றனர். மார்ச் 29 ஆம் தேதி அந்தப் பெண் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்ததாகவும், ஏப்ரல் 4 ஆம் தேதி அவர் வீடு திரும்பாதபோது அவரது குடும்பத்தினர் காணாமல் போனதாக புகார் அளித்ததாகவும் கூடுதல் காவல் ஆணையர் விதுஷ் சக்சேனா தெரிவித்தார். போலீசார் அப்பெண்ணை மீட்டபோது, பாலியல் வன்கொடுமை விவகாரம் தெரியவந்ததாகவும் கூறினார்.
அந்தப் பெண்ணின் தாயார் தனது புகாரில், தனது மகள் மார்ச் 29 அன்று தனது தோழியின் வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீட்டுக்குத் திரும்பும் வழியில், ராஜ் விஸ்வகர்மா என்ற சிறுவனைச் சந்தித்தார், அவர் அவளை இலங்கையில் உள்ள தனது ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் என் பெண்ணை பாலியல் செய்துள்ளனர்” எனக் குற்றம் சாட்டினார்.