தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

இந்தியாவை உருக்குலைத்த கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது குறைந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இது தற்காலிகாக தீர்வு மட்டுமே, தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால் ஊடரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒருவித தயக்கம் இருக்கிறது. தெரிந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்துவிட்டார்கள் என்ற செவிவழி செய்திகளைக் கேட்டு அச்ச உணர்வுடன் இருக்கிறார்கள். இதுதவிர வாட்ஸ்அப்களில் வரும் வதந்திகளையும் கேட்டு பயத்துடன் உள்ளார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 99% சதவீதம் பேர் ஆரோக்கியமாக இருந்தாலும், அதை மக்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

அந்த அறிக்கையில், “தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு சில நோயாளிகள் பலியாகியிருப்பதாக ஒருசில ஊடகங்களில் தவறான செய்திகள் வலம் வருகின்றன. தற்போது வரை நாடு முழுவதும் மொத்தம் 23.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. வெளியான செய்திகளில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு பதிவான 488 உயிரிழப்புகள் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செய்திகள், முழுமையற்ற முறையிலும் அடிப்படை புரிதல் இல்லாமலும் வெளியிடப்படுகின்றன. பலியாகியுள்ளனர் என்னும் பொதுவாக குறிப்பிடப்படுன் வார்த்தை தடுப்பூசியால் உயிரிழந்தனர் என்பதைக் குறிக்கும் என்பது கூடவா தெரியாது?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

சுமார் 23 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்ட பிறகு ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை நூறுக்கு 0.0002% மட்டுமே. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வழக்கமாக மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் உயிரிழப்புகள் ஏற்படும். சராசரியாக ஆயிரம் பேரில் ஏற்படும் உயிரிழப்பின் வீதம் 2017ஆம் ஆண்டில் 6.3ஆக உள்ளது. இதை விட மிக மிக குறைவு. கொரோனாவால் பலியானோரின் வீதம் 1%க்கும் அதிகமானது. தடுப்பூசிகளால் அந்த வீதத்தையும் நம்மால் குறைக்க முடியும். கொரோனா உயிரிழப்புகளை விட தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஏற்படும் உயிரிழப்புகளின் மிக மிக குறைவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழப்பு ஏற்படுமா? – முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் உயிரிழப்புகள் தடுப்பூசிகளால் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. தடுப்பூசிக்காக மாவட்ட, மாநில, தேசிய அளவில் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பின் ஏற்படும் விளைவுகளை ஆராய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களின் முறையான விசாரணைக்குப் பின்பே இறுதி முடிவு செய்ய வேண்டும். ஆனால் சில செய்தி நிறுவனங்கள் தேவையில்லாமல் மக்களைப் பதற்றத்துக்குள்ளாக்கி வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.