டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

 
Biden

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.  

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று  இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. ஜி20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

biden

இந்த நிலையில், இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாநாட்டில் பங்கேற்றார். இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், இந்திய பயணத்தை நிறைவு செய்த ஜோ பைடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வியட்நாம் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.