விவசாயிகளிடமிருந்து பசு கோமியத்தை ரூ.10-க்கும் வாங்கும் உ.பி. அரசு

 
as

பசு கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடங்கியது உ.பி. அரசு.


உத்தரப் பிரதேச அரசு, புலந்தஷாரில் விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து பசுவின் சிறுநீரைக் கொள்முதல் செய்யும்  திட்டத்தை அம்மாநில அரசு சோதனை முறையில் தொடங்கியது. இதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கூடுதல் வருமான ஆதாரம் உருவாக்கப்படுவதுடன், வயதான மற்றும் பால் தராத கால்நடைகளும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 15 கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு லிட்டர் பசுவின் சிறுநீர் ரூபாய் 10 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த சிறுநீர் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும், திட்டம் வெற்றி பெற்றால் புதிய கொள்கையை உருவாக்கி மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமும் சுமார் 500 லிட்டர் பசுவின் சிறுநீர் சேகரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புலந்தஷாரில் பல்வேறு சிறுநீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டருக்கான கொள்முதல் விலையை ரூ.10-லிருந்து ரூ.20-ஆக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.