5 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைத்த ஆசிரியர்- பள்ளியில் அரங்கேறிய கொடுமை

 
ச்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விளையாட்டுப் பள்ளியில் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆசிரியை அவனது மர்ம உறுப்பில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வழக்கறிஞரின் மகனான அந்த ஐந்து வயது சிறுவன், வாரணாசியில் உள்ள செரீன் சோனி ப்ளே ஸ்கூலில் மாணவனாகப் பயின்று வருகிறான்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள செரீன் சோனி ப்ளே ஸ்கூலில், ஐந்து வயது சிறுவன் தன் கால்சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டதால், அவரது ஆசிரியை ஒருவர் சூடான கத்தியால் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளைச் சுட்டதாக அக்குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரை வாபஸ் வாங்குமாறு பெற்றோரை பள்ளி நிர்வாக முதல்வர் மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பாத்ரூம் வருகிறது... கழிவறைக்கு செல்ல வேண்டும் என அச்சிறுவன் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் சிறுவன் தன் கட்டுப்பாட்டை இழந்து கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, குழந்தையை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்று, கேஸ் அடுப்பை பற்ற வைத்து கத்தியை சிவந்துபோகும் அளவுக்கு சூடாக்கி சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ அல்லது இதே தவறை மீண்டும் செய்தாலோ கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பயந்துபோன அந்தக் குழந்தை வீட்டிற்குத் திரும்பியதும், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் தன் பெற்றோரிடம் கூறியது. குழந்தையின் தந்தையும் தாயும் வகுப்பு ஆசிரியரைத் தொடர்புகொள்ள முயன்றனர், ஆனால் அவர் அவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி முதல்வர் ஹேமலதா சிங்கிடம் பேசியபோது, ​​அவர் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.