காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகளாக வடகிழக்கை புறக்கணித்தது... மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் குற்றச்சாட்டு

 
சர்பானந்தா சோனோவால்

காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகளாக வடகிழக்கை புறக்கணித்தது ஆனால் இன்று பிரதமர் மோடி வடகிழக்கை திறந்த கரங்களுடன் அரவணைத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ரோஜ்கர் திட்டத்தின்கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகளாக வடகிழக்கை புறக்கணித்தது. இன்று பிரதமர் மோடி வடகிழக்கை திறந்த கரங்களுடன் அரவணைத்துள்ளார். இப்போது அது (வடகிழக்கு மாநிலங்கள்) கவனம் மற்றும்  வளர்ச்சியின் மைய புள்ளியாக மாறியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் சிறப்பு ஆதரவின் காரணமாக தேசிய அரங்கில் வடகிழக்கு மீண்டும் உயர்ந்து வருகிறது. 

காங்கிரஸ்

கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மீண்டும் உயர்ந்துள்ளது, அது சிக்கிம் அல்லது திரிபுரா, மிசோரம் அல்லது மேகாலயா, நாகாலாந்து அல்லது மணிப்பூர் அல்லது அசாம்  அல்லது அருணாச்சல பிரதேசம் என ஒவ்வொரு மாநிலமும் அதன் தனித்துவத்தை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கெல்லாம் காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு ஆதரவு மற்றும் வடகிழக்கு அங்கீகாரம் தான். இளம் தலைமுறையினர் ஒரு பொன்னான வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தங்கள் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்து கொள்வது அவர்களுக்கு ஒரு பாக்கியமாகும். அமிர்த நேர சகாப்தத்தில் நாம் நுழையும் போது, இந்தியாவை ஒரு தன்னம்பிக்கை தேசமாக, தற்சார்பு பாரதமாக மாற்ற நாம் அனைவரும் நம்மால் முடிந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 

மோடி

ஒவ்வொரு தனிநபரின் உள்ளடக்கிய முயற்சிகள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அந்த நோக்கத்துடன் நமது பிரதமரின் கொள்கை, திட்டம் மற்றும் முன்முயற்சியின் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதிகாரம் பெறுகிறார்கள் என்று நான் நம்புகிறேன். இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது, அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி போன்றவற்றை உள்ளடக்கிய முயற்சியின் மூலம் நம் இலக்கை அடைய நாம் ஏற்கனவே புறப்பட்டு விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.