பிரதமரின் அதிரடி உத்தரவு- மத்திய இணையமைச்சர் திடீர் ராஜினாமா
மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் பாஜக தலைவர் ரவ்னீத் சிங் பிட்டு, மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக அவரது பதவிக்காலம் ஏற்கனவே ஜூன் மாதத்தில் முடிவடைந்திருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பிட்டு போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆட்சி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைப்பதில் ரவ்னீத் சிங் பிட்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில் ரவ்நீத் சிங் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. அவரது ராஜினாமாவை ஏற்பதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார்.

