ராம் விலாஸ் பஸ்வானின் சொத்துக்கு மட்டும் சிராக் பஸ்வான் வாரிசு.. ஆனால் நான் அவரின் அரசியல் வாரிசு..பசுபதி குமார் பராஸ்

 
பசுபதி குமார் பராஸ்

ராம் விலாஸ் பஸ்வானின் சொத்தின் வாரிசு சிராக் பஸ்வான். ஆனால் ராமாயணத்தில் ராமரின் சகோதரர் லட்சுமணனை போலவே, எனது மறைந்த சகோதரின் அரசியல் வாரிசு நான்தான் என்று மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தெரிவித்தார்.


ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும்,  மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் பீகாரில் உள்ள ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிடுவேன். ராம்விலாஸ் பஸ்வான் என்னை 2019ல் கூட இந்த தொகுதியில் இருந்து போட்டியிட சொன்னார். ராம் விலாஸ் பஸ்வான் தனது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும், தனது முடிக்கப்படாத கனவுகளை நிறைவேற்றவும் என்னை கேட்டுக் கொண்டார். 

மக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி கடிதம்

சட்டப்படி, ராம் விலாஸ் பஸ்வானின் சொத்தின் வாரிசு சிராக் பஸ்வான். ஆனால் ராமாயணத்தில் ராமரின் சகோதரர் லட்சுமணனை போலவே, எனது மறைந்த சகோதரின் அரசியல் வாரிசு நான்தான். அவர் (ராம் விலாஸ் பஸ்வான்) மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவரது ஹாஜிபூர்  மக்களவை தொகுதியில் போட்டியிடும்படி என்னிடம் கேட்டார். குடும்பத்தில்  உள்ள அனைவரையும் விட அவர் என்னை நம்புவதாக கூறினார். 

சிராக் பஸ்வான்

நான் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை, ஆனால் அவர் செய்தார். அவரது தொகுதியில் இருந்து நானும் களமிறங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிறகு, லோக் ஜன்சக்தி கட்சி, ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் ஒரு அணியும் (லோக் ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ்), ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமையில் ஒரு பிரிவாகவும் (ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சி)  இரண்டாக உடைந்தது.