அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும், கனவு நனவாகும் வரை மோடி பதவியில் இருப்பார்... மத்திய அமைச்சர்

 
பிரதமர் மோடி

அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும், கனவு நனவாகும் வரை பிரதமர் மோடி பதவியில் இருப்பார் என்று மத்திய கப்பல் துணை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமர்ச் சாந்தனு தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்காக தொடங்கியதை முடிக்கும் வரை ஓய்வெடுக்கவோ, பதவியை விட்டு விலகவோ மாட்டார். அவர் புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்தார்.

சாந்தனு தாக்கூர்

கனவு நனவாகும் வரை பிரதமர் மோடி பதவியில் இருப்பார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற (எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் சந்திப்புகள்) இது போன்ற பல கூட்டங்கள் நடத்தப்படும் என்றாலும், பா.ஜ.க. முந்தைய (2019) நாடாளுமன்ற தேர்தலை விட பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு திரும்பும் என்பதை நீங்கள் குறிப்பிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு  I.N.D.I.A.என்று பெயரிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் முதல் சந்திப்பு பீகாரிலும், இரண்டாவது சந்திப்பு கர்நாடகாவிலும் நடைபெற்றது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் 3வது சந்திப்பு மகாராஷ்டிராவில் மும்பையில் வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது.