ஒரே நாடு; ஒரே நுழைவு தேர்வு திட்டம் தற்போதைக்கு இல்லை - மத்திய அரசு திட்டம்

 
dharmendra Pradhan

ஒரே நாடு; ஒரே நுழைவுத்தேர்வு  திட்டத்தை இப்போதைக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என மத்திட அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

ஒரே நாடு; ஒரே நுழைவு தேர்வு திட்டம் தற்போதைக்கு இல்லை - மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் 3 பொது நுழைவுத் தேர்வுகளின் அடிப்படியில் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில்  மருத்துவ படிப்புகளில் 'நீட்' என்னும் பொது நுழைவுத்தேர்வும்,   என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. உள்ளிட்ட குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களில்  சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வும்,   ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படுகிறது. மூன்றாவதாக 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ‘கியூட்’எனப்படும்  நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த தேர்வுகள் அனைத்தும் என்.டி.ஏ. என அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

Dharmendra Pradhan

 இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளையும் தற்போதுள்ள 'கியூட்' என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் (இளநிலை) இணைக்க மத்திய  அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.  இந்த ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வினை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் அண்மையில் கூறியிருந்தார். இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. கல்வியாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.    இந்நிலையில் ஒரே நாடு; ஒரே நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய  கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத்  தேர்வுகள் ஒன்றிணைக்கப்படாது என்பதால் மாணவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் நுழைத்தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவித்தார்.